25.1 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

மன்னார் வளைகுடாவில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இன்றைய தினம் (12.01.2025) கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்கள், ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடல்வழி சட்டங்களை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இன்று மாலை, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் குறித்த மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணையின் பின்னர், அவர்களை வீழ்குடி பொது சிறையில் வரும் 22.01.2025 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனவர்கள், இலங்கையின் கடலோர மீன் வளங்களை சட்டவிரோதமாக பிடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்கரை ஊடக பேச்சாளர் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள், இலங்கை கடல்வழி சட்டங்களை பேணுவதற்கான கட்டாய நடவடிக்கைகளின் ஓர் பகுதி என்றும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நடுவீதியில் வைத்து மாணவியை கடத்திச் சென்ற மச்சான்!

Pagetamil

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் சத்தியப்பிரமாணம்

east tamil

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காலமானார்

east tamil

மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

east tamil

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

east tamil

Leave a Comment