நாட்டின் 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, அநுராதபுரத்தில் 10 நீர்த்தேக்கங்களில் 7, அம்பாறையில் உள்ள 3 நீர்த்தேக்கங்கள், மட்டக்களப்பில் 4 நீர்த்தேக்கங்களில் 3 முழு கொள்ளளவை எட்டியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பதுளையில் 7 நீர்த்தேக்கங்களில் 3 நிரம்பியுள்ளதுடன், ஹம்பாந்தோட்டையில் 10 நீர்த்தேக்கங்களில் 2, காலியில் 2 நீர்த்தேக்கங்களில் 1, கண்டியில் 3 நீர்த்தேக்கங்களில் 2, குருநாகலில் 10 நீர்த்தேக்கங்களில் 1, மொனராகலையில் 3 நீர்த்தேக்கங்களில் 2, மற்றும் பொலன்னறுவையில் 4 நீர்த்தேக்கங்களில் 1 நீர்த்தேக்கம் என மொத்தமாக 27 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்துள்ளது.
இதனால் சில பகுதிகளில் வெள்ள அபாயமும் நிலச்சரிவு அபாயமும் உருவாக வாய்ப்பு உள்ளதென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த எச்சரிக்கை 12ஆம் தேதி இரவு 8.30 மணியிலிருந்து 13ஆம் தேதி இரவு 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்து, அதிகாரிகளின் வழிகாட்டல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.