27.1 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இந்தியா

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

ஒரு மாணவியின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய சோகமான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதலனின் துரோகத்தால், ஒரு வீடியோ, 64 பேரால் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்காக மாறியுள்ளது. குறித்த சம்பவம் கேரள மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

மாணவியின் காதலன், அவர்களது நெருக்கமான தருணங்களில் தன்னை மறைத்து வீடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல், அதை தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பிறரிடம் பரவியதன் விளைவாக, நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள், தந்தையின் நண்பர்கள் என பலரும் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் 5 ஆண்டுகள் நீடித்து மாணவியின் வாழ்வை முற்றிலும் சிதைத்துள்ளது. சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.

12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், 13 வயதில் முதல் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தெரிவித்துள்ளார். அந்த மாணவி 2019 ஆம் ஆண்டு ஒரு நபரை காதலித்துள்ளதாகவும், காதலன் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மாணவிக்கு தெரியாமல் அதை வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளான்.

இதனை தொடர்ந்து குறித்த மாணவி 64 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் 34 பேரின் பெயர்களை மாணவி எழுதிக்கொடுத்துள்ளதோடு, மேலும் 30 பேரின் மொபைல் எண்களை மாணவி தெரியப்படுத்தியுள்ளார்.

மாணவியிடம் செல்போன் இல்லாத நிலையில், மாணவி தந்தையின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவருகிறது.

இது தொடர்பாக 64 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்ணின் காதலன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள் என 13 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைமைறைவாகியுள்ளவர்களை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தற்போது சிறுமிக்கு பெண்கள் காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் சமூகத்தின் நெஞ்சை நெருக்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பும் வகையிலும் உள்ளது. காதலனின் துரோகமும், சமூகத்தின் தாழ்வான மனப்பான்மையும் இத்தகைய கொடூரங்களை உருவாக்கியுள்ளன.

சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என்பது சமூகத்தின் கோரிக்கையாகும். இதுபோன்ற சோகங்களை தடுக்க, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளும், சமூகத்தில் விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும்.

மாணவியின் குடும்பத்திற்கும், இதர பாதிக்கப்பட்டவர்களுக்கும் சட்டத்தால் நியாயம் கிடைப்பதோடு, சமூக அமைதியை மீண்டும் நிலைநாட்டுவது அவசியமாக உள்ளது. 5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டமை என்பது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவே விளங்குகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி உயிரிழப்பு: தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக போலீஸ் தகவல்

Pagetamil

விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான் ஆவேசம்

Pagetamil

Leave a Comment