தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் முன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தபோது, பந்தய களத்தில் விபத்தில் சிக்கினார்.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், அஜித் குமார் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை பார்த்த நடிகர் அருண் விஜய், அஜித்தின் மேலாளரை தொடர்பு கொண்டு அவரது நலன் குறித்து விசாரித்தார்.
மேலும், அஜித் சார் தன் விருப்பமான விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார். ரேசிங் ஒரு ஆபத்தான செயலாக இருந்தாலும், அதில் அவர் காணும் மகிழ்ச்சி குறிப்பிடத்தக்கது, எனத் தெரிவித்தார்.
அஜித் குமாரின் நிகழ்கால ஆர்வங்கள் அவரது திரைத்துறைக் கடமைகளுடன் இணைந்து அவர் வாழ்வில் புதிய அனுபவங்களை உருவாக்கி வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1