மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய மற்றும் நவீன இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரைச் சேர்ந்த வரதராஜன் டிலக்சன் என்பவரால் குறித்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிந்தவூரைச் சேர்ந்த காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி பயின்ற டிலக்சன், பின்னர் தனது உயர் கல்வியை யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் Mechatronic Engineering Technology பிரிவில் தொடர்ந்தார். இவரின் இறுதி ஆண்டு கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, மூளையின் உள்ளகப் பகுதிகளில் உள்ள கட்டிகளை துல்லியமாக கண்டறியும் இயந்திரத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் துறையில் உள்ள தனது நுணுக்கமான அறிவை பயன்படுத்தி, இச்சாதனத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இசாதனமானது, மூளையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரைவாகவும் துல்லியமாகவும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள உதவுமாதலால், சுகாதார துறையில் முன்னேற்றமாக இவரது இக் கண்டுபிடிப்பு அறியப்படுகிறது.