மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய சாமஸ்ரீ தேசமானிய உதயகுமார் உதயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் மையத்தின் பொதுக்கூட்டமும் நேற்றைய தினம் (11.01.2025) மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மையத்தின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் தலைமையிலே முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், பிரதம அதிதியாக மண்முனைப்பற்று-ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வில் வளவாளர்களாக பிரபல சட்டத்தரணி எம்.எஸ்.எம்.முகைதீன் சாலி மற்றும் ஆலோசகர் வீ.கமலதாஸ் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கின் முடிவில், சமூக மேம்பாட்டு மையத்தின் நிருவாகத் தேர்தல் இடம்பெற்றது. இதில் பலத்த போட்டிக்கு மத்தியில், உதயகுமார் உதயகாந்த் பெரும்பான்மையான வாக்குகளுடன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்படி, புதிய நிர்வாக செயலாளராக துரைராஜா லெட்சுமிகாந்தன் அவர்களும், பொருளாளராக ஆயுர்வேத வைத்தியர் சபாரெத்தினம் சுதர்சன் அவர்களும், உபதலைவராக எம்.வை.ஆதம் அவர்களும், உபசெயலாளராக அருணாசலம் செல்வேந்திரன் அவர்களும், நிர்வாக குழு உறுப்பினர்களாக
இ.கோமலேஸ்வரி, கே.சதீஸ்குமார், ரீ.தயானந்தம், கே.தவராசா, கே.நடேசன், எம்.எஸ்.எம்.அகமட் லெவ்வை, திருமதி கே.தவப்பிரகாசம், எம்.பகிதரன், எம்.எஸ்.எம்.நசீர், கே.தங்கராசா, ஈ.சீதாராமன், அகமட் சின்னலெவ்வை, என்.நவதாசன் தேர்வுசெய்யப்பட்டனர்.
மேலும், இந்நிகழ்வில் புதிய தலைவர் உதயகுமார் உதயகாந்த் தனது தலைமையேற்பு உரையில் சமாதான நீதிவான்களின் சமூகப் பங்களிப்புகளை மேம்படுத்துவதற்கான தனது திட்டங்களை எடுத்துரைத்தார். அவரது உரைக்கு அடுத்ததாக, புதிய நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பின்னர், செயலாளர் துரைராஜா லெட்சுமிகாந்தன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்வு பூரணமானது.