நியூயோர்க் நகரின் பிராங்க்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 5 அலாரத்துடன் வெடித்த பெரும் தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயை அணைக்கும் பணியில் 200 தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதோடு, இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அருகிலுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் காலி செய்யப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்து நியூயோர்க் நகரை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், தீயணைப்பு வீரர்களின் போராட்டம் தொடர்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1