26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
உலகம்

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வத்திக்கானில் வெளிநாட்டு தூதர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவது வழக்கம். அந்த நடைமுறைப்படி, 2025 ஆண்டுக்கான நிகழ்வு நேற்று (09) வத்திக்கானில் நடைபெற்றது.

பல நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் போது, கரகோஷங்களுடன் உரையை ஆரம்பித்த 88 வயதான போப் ஆண்டவர், சில வரிகளுக்குப் பின்னர், தான் சளி காரணமாக பேச முடியாத நிலைமையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதன்படி, தன்னுடைய நீண்ட உரையை அவருடைய உதவியாளர் வாசித்தார். இதனால் நிகழ்ச்சி சாதாரணமாகவே முடிவடைந்தது.

போப் பிரான்சிஸ் அண்மைக் காலமாக வயோதிகத்தால் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் முந்தைய நிகழ்வுகளிலும் சில வேலைகளை உதவியாளர்களின் உதவியுடன் மேற்கொண்டார்.

வத்திக்கானின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உலக அமைதி தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தும் நிகழ்வு, கத்தோலிக்க திருச்சபையின் சர்வதேச தொடர்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்வில், போப் ஆண்டவர் உரையை உதவியாளர் மூலம் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அவர் உடல்நிலை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

Leave a Comment