தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (10.01.2025) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2021 ஆம் ஆண்டில், அவர் இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும் பதவி வகித்திருந்த காலத்தில், காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜை தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த காணி தொடர்பான வழக்கின் பின்னணியில், அவர் மீது அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனையடுத்து, காணி சீர்திருத்த ஆணையாளர் தாக்கல் செய்த வழக்கில், சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1