அமெரிக்காவின் தெற்கு புளோரிடா விமான நிலையத்தில், ஜெட் ப்ளூ விமானத்தின் தரையிறங்கும் சாதனத்தின் (landing gear compartment) உள்ளே அடையாளம் தெரியாத இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க்கிலுள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நேற்று (08) இரவு 11 மணிக்குப் பிறகு குறித்த விமானம் தெற்கு புளோரிடா விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான பராமரிப்பு நடவடிக்கையின் போது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் எவ்வாறு தரையிறங்கும் சாதன பகுதிக்குள் நுழைந்தனர் என்பதையும், அவர்களின் அடையாளங்களையும் தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1