ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து அண்மைய காலங்களாக காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பதோடு, இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும், காணாமல் போன பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போன பொருட்கள் பற்றிய விசாரணைகள் முடிக்கப்பட்டவுடன், நீதிமன்றத்திற்கு பட்டியலை சமர்ப்பிக்கப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நிலபுலி லங்காதிலக்க, விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.