இஸ்ரேலிய பிரஜைகளுக்கு இலங்கையில் மதஸ்தலங்கள் அல்லது கலாசார நிலையங்கள் அமைப்பதற்கு எந்த விதமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புத்தசாசனம் மற்றும் கலாசார அமைச்சு இதுவரை இஸ்ரேலியர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், சில சட்டவிரோத கட்டிடங்கள் உருவாகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
மேலும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பாக இருக்கும். ஆனால், அவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அரசு அனுமதி வழங்கவில்லை. விசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிராக கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படும். வெளிநாட்டவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த, அரசாங்கம் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் இவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.