சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி குழுவினுடைய ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவு சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று (08.01.2024) நடைபெற்றது. கலாச்சார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் அவர்கள் இந்த ஒன்றுகூடலின் தலைமை வகித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், கலாச்சார மத்திய நிலையத்தினுடைய தொழிற்பாடுகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை, யூ.கே.எம். றிம்ஸான் அபிவிருத்தி குழுவினருக்கு விளக்கியுள்ளதோடு, கலாச்சார மத்திய நிலையத்தினுடைய தலைவராக யூ.கே.எம். றிம்ஸான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
செயலாளராக, மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் அஸ்வான் மௌலானா அவர்களும், உப தலைவராக சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்ரப் அவர்களும், உப செயலாளராக அல்-மீஸான் பௌண்டஷனின் தவிசாளர் நூருல் ஹுதா உமர் அவர்களும், பொருளாளராக எம். மாஹிர் (கலைஞர் மற்றும் கணக்கு பரிசோதகர்) அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக 06 கலைஞர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் பிறகு,தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அபிவிருத்தி குழு, தொடர்ந்து கலாச்சார மத்திய நிலைய நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.எம். பளீல் மற்றும் பல கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.