தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் 11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு இன்று (08) தெரிவித்துள்ளது.
அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.வி. கினிகே குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியார்களுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாள மாத்தறை பிரதேச பொறுப்பதிகாரியாகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.ஜி.எல்.ஏ. தர்மசேனா, நீர்கொழும்பு பிரதேச பொறுப்பதிகாரியாகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.டி.பி. ஏ. வீரசிங்க, மாத்தறை பிரதேச பொறுப்பதிகாரியாகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஜி.ஏ.பி. குணதிலக, களனி பிரதேச பொறுப்பதிகாரியாகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். கமகே, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியார்களுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ்.ஐ.ஏ. அமரசிங்க பாராளுமன்றப் பிரிவின் பணிப்பாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.கே. விக்கிரமநாயக்க, பாராளுமன்ற பிரதேச பணிப்பாளராகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.எம். இ. பெரேரா பொலிஸ் கட்டளைத் தளபதியின் தகவல் பிரிவின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க அம்பாறை பிரதேச பொறுப்பதிகாரியாகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ. சோமரத்ன வவுனியா பிரதேச பொறுப்பதிகாரியாகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி. எச். இ. எல். பெரேரா கம்பளை பிரதேச பொறுப்பதிகாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.