“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பில் ஜனவரி 21, 22ம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஜனவரி 21, 22ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் தூய்மையான சுற்றுச்சூழலினை உருவாக்கும் நோக்கில் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொது இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், மாசுபாடுகளை குறைத்தல் மற்றும் குப்பைகளை மீள்சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தல் என்பன மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பொது மக்களின் பங்களிப்பு மற்றும் வரவேற்பினை அதிகரிக்க, “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் விரிவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய பாராளுமன்ற விவாதம் மிக முக்கியமானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த விவாதம் மூலம், தூய்மையான இலங்கை திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்திறன் குறித்து மக்களும் விளக்கம் பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, சமூக அமைப்புகள், பிரதேச சபைகள் மற்றும் தனிநபர்கள் இத்திட்டத்தில் எப்படி பங்களிக்க முடியும் என்பதற்கான வழிகாட்டல்களும் விவாதத்தில் பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.