2025ம் ஆண்டுக்கான முதல் வார பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (07.01.2025) தொடங்கவுள்ள நிலையில், முக்கிய சில விடயங்கள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.01.2025) வரை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சபை அமர்வின் போது, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் துறைசார் அமைச்சரால் முன்வைக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலம், உள்ளூராட்சி துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற முக்கிய தலைப்புகளுக்கு பின்னர், எதிர்கால உள்ளூராட்சி தேர்தல்களில் என்ன மாற்றங்கள் இடம்பெறலாம் என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க இருக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1