கல்கிஸ்ஸ, வடரப்பல, செம்பலன்கொடுவ பிரதேசத்தில் இன்று (07) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 36 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார், காயமடைந்தவர் 20 வயதுடையவர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1