Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

சதுப்புநிலங்கள் மற்றும் காடுகளை மீளமைத்தல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் தொடர்பாக முக்கிய பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு இன்று (07.01.2025) திருகோணமலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை PROCLIME நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததுடன், கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் பல முக்கிய தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சதுப்புநிலங்கள் மற்றும் காடுகளின் சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தல், அவற்றின் மீளமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை விளக்கல், பங்கு கொண்டவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கல் என்பன இந்த செயலமர்வின் பிரதான நோக்கங்களாகுமென தெரிவிக்கப்பட்டது.

செயலமர்வின் போது முக்கியமாக, காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் பற்றிய அறியப்பட்ட உண்மைகள், சுற்றுச்சூழல் மாற்றங்களின் தாக்கம், மீளமைப்பு திட்டங்களின் செயல்திட்டங்கள், பங்கு கொள்ளும் சமூக அமைப்புகளின் தாராள பங்களிப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த முயற்சியால், கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் ஆர்வம் மற்றும் செயற்பாடு மேம்படும் என எதிர்பார்க்கப்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்,

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் இன்று

east tamil

கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி வலியுறுத்தல்

east tamil

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

Leave a Comment