கிளிநொச்சி இரணைமடுக் குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், கால் வீங்கிய நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக ஒரு காட்டு யானை கடுமையாக துன்பப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த யானை குளத்தின் அருகிலும் குளக்கட்டியின் கீழாகவும் தொடர்ந்து துன்பத்துடன் அலைந்து திரியும் நிலையில் அலைந்து திரிவதாக கூறிய பிரதேசவாசிகள் யானையின் கால் வீக்கத்திற்கான சிகிச்சையை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், இதற்காக சுகாதார மற்றும் வனவியல் துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், யானையின் நிலைமை மேலும் மோசமடைவதற்குள் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலே இதற்கு தீர்வு காண முடியும் என பிரதேசவாசிகள் வலியுறுத்துகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1