நேற்று (05.01.2025) மதியம், நல்லதண்ணி வனப் பகுதியில் அனுமதி இல்லாமல் உல்லாசமாக இருந்த எட்டு பேரை வனத் துறை அதிகாரி ஆர்.எம்.டி.பி. ரதநாயக்க, பி.ஜீ. அனுரகுமார மற்றும் ரக்காடு கிராம அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு, ஹொரன மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை நேற்று மாலை ஹட்டன் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, தலா ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி மீண்டும் மன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக வன பாதுகாப்பு அதிகாரி ஆர்.எம்.டி.பி. ரதநாயக்க தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1