ரோட்டரி இலங்கை மாவட்ட – 3220 ஆளுநர் சுசேனா ரணதுங்க நேற்றைய தினம் (05-01-2025) திருகோணமலை ரோட்டரி கழகத்திற்கு உத்தியோகபூர்வமாக விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவருடன் ஆளுநரின் செயலாளர் காமினி மடநாயகே மற்றும் உதவி ஆளுநர் G. ஜெயபாலச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்களை திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர், டாக்டர் ஜெகதீசன் வரவேற்றதோடு, கிரேஸ் ஹோம் குழந்தைகள் வரவேற்பு நடனத்தை முன்வைத்திருந்தனர்.
இதன் போது, கடந்த ஆண்டு (2004) மேற்கொண்ட செயல்பாடுகள் தொடர்பாக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் சுருக்கமாக விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந் நிகழ்வில், திரு. ராஜாராம் மோகன் இசை நிகழ்வும் மேடையேற்றப்பட்டிருந்தது.
ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் செயல்பாடுகளை பாராட்டியதுடன், “லிட்டில் ஹார்ட்” மற்றும் “தற்கொலை தடுப்பு” போன்ற ரோட்டரி தேசிய நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் விளக்கியிருந்தார்.
அது மட்டுமின்றி, ஆளுநர் அவர்களால் நிலாவெளி கோபாலபுரத்தில் உள்ள மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மீன்பிடி அமைப்புகளுக்கு 10 மீன் பிடி படகுகள் (கேனோன்) மற்றும் வலைகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், திரு. அகிலன் அவர்களின் நிதி மூலம் திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் தபால் நிலைய சந்தியில் கட்டப்பட்ட பேருந்து நிலையமும் திறந்து வைக்கப்பட்டு பின்னர், திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் பராமரிக்கப்படும் மான்கள் சரணாலயத்தையும் பார்வையிடப்பட்டது.
2024-2025 ஆண்டுக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு. பிரபாகரன் நன்றியுரையையும் வழங்கினார்.