தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (05.01.2025) இரவு வேளை, மருதானையிலிருந்து தெற்கு களுத்துறைக்கு நோக்கி பயணித்த ரயில் பின்னர் ரயில் முனையத்திற்கு சென்ற போதே இவ்வாறு தடம்புரண்டது.
ரயில் தடம் புரண்டதையடுத்து, கடலோர ரயில் போக்குவரத்தில் ஒரு ரயில் மருங்கு முற்றிலும் தடைப்பட்டது.
தற்போது, தடம் புரண்ட ரயிலை ரயில்வே ஊழியர்கள் மீள் தடமேற்றியுள்ள போதும், இன்று காலை வரை ஒரு மருங்கின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் ஒரு மருங்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1