26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
கிழக்கு

சாய்ந்தமருதில் தற்கொலை

கைத்தொலைபேசியில் ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் கைத்தொலைபேசி ஊடாக ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த 20 வயதான முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் என்ற இளைஞன், விரக்தியடைந்த நிலையில் ஒரு வகையான மாத்திரைகளை உட்கொண்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இளைஞனின் உடல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் சவளக்கடை பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்ப கட்ட விசாரணைகளில், மரணமடைந்த இளைஞன், சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்தார் என்றும், அதில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை மாத்திரையை உட்கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த மரணமடைந்த இளைஞனின் தந்தை தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக முன்னாயத்தங்களை மேற்கொண்டதாகவும் அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான கைத்தொலைபேசி online ஊடாக புதிய வகை கொடுக்கல் வாங்கல் வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து இடம்பெற்றுவருகிறது.

குறித்த online வியாபாரம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி தலைமறைவு

east tamil

மூதூரில் வெள்ள நீருக்கு எதிரான போராட்டம்

east tamil

சிறுவர்களின் உயிரை பழிவாங்கிய குறிஞ்சாக்கேணி விடயம் முடிவுக்கு வந்தது

east tamil

அனுர ஆட்சியிலும் இலுத்தடிக்கபடும் மயிலத்தமடு

east tamil

திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP

east tamil

Leave a Comment