கடந்த 2023 டிசம்பர் 14 ஆம் திகதி பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரட்ன தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதன்பிறகு இன்று வரை, நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள அதிகாரபூர்வ இல்லத்தை அவர் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சபாநாயகர் அலுவலகத்திற்கு, நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களிலும், அவை நடக்காத நாட்களிலும் அவர் வருகை தருகின்றார். எனினும், அவர் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லையென நாடாளுமன்ற பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜகத் விக்ரமரட்ன கடந்த பொதுத்தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு மாற்றாக ஜகத் விக்ரமரட்ன சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
அதிகாரபூர்வ இல்லத்தை பயன்படுத்தாமல், சபாநாயகர் தனது பணிகளை முன்னெடுப்பது பல கேள்விகளை எழுப்புகின்றது. இது தொடர்பாக அவரது அலுவலகத்திலிருந்து மேலதிக விளக்கங்கள் வழங்கப்படுமா என்பது ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.