கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் இரு நபர்கள் உயிரிழந்ததாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் இன்று (06.01.2025 திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – முழங்காவில் மற்றும் கண்டாவளை பிரதேசங்களைச் சேர்ந்த இரு நபர்களே இந்த நோயினால் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், தசைநோவு, கண்சிவத்தல், சுவாசப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படும் நிலையில், அதனை கண்டறிந்து உடனடியாக வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியம் என வைத்தியர் த.வினோதன் வலியுறுத்தினார்.
இந்த எலிக்காய்ச்சல் தொடர்பான மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதார அமைப்புகளின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்படுவதாகவும், நோயின் பரவலை கட்டுப்படுத்தவாகவும் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1