31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை மலையகம்

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

நுவரெலியாவில் மருந்தகத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் நுவரெலியா ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் இன்றைய தினம் (திங்கட்கிழமை 06) கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட விரோத கருக்கலைப்பு மாத்திரையை 15,000 ரூபாய்க்கு மருந்தக உரிமையாளர் விற்பனை செய்வதாக பிரதேச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் நிலைய அதிகாரி, நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியுடன் இணைந்து உத்தியை பயன்படுத்தி குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

சந்தேக நபரின் மருந்தகத்தில் விற்பனைக்காக ஏராளமான கருக்கலைப்பு மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

கோர விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

யாழ் முன்னாள் எம்.பியொருவர் விரைவில் கைதாவார்: சுமந்திரன் ஆருடம்!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!