அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையையொட்டி, ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10 இல் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது. இது, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இதன் பாடல்களை தேவி ஸ்ரீபிரசாத்தும், பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷும் உருவாக்கியுள்ளனர்.
முன்னதாக, பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எப்போது வெளியீடு என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கையில் துப்பாக்கியுடன் மாஸ் கெட்டப்பில் அஜித்தின் புகைப்படத்துடன் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படம் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.