மலேசியாவில் உள்ள திரங்கானு பல்கலைகழகம் நடாத்தும் அனைத்துலக வானரங்க
சொற்போர் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய அணி இறுதிப்போட்டிக்கு
தெரிவாகியுள்ளது.
இவ் விவாதப் போட்டிக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவர்களை
கொண்ட அணி அறிவியல் தமிழ் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இவ்வணி
முதல் மூன்று சுற்றுக்களிலும் இந்தியா, சிங்கபூர், மலேசிய அணிகளுடன்
போட்டியிட்டு தற்போது இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இறுதி சுற்று
இந்தியாவுடன் இடம்பெறவுள்ளன.
இலங்கை சார்பில் பங்குபற்றி அணியில் மோகனராஜ் ஹரிகரன், கிளிநொச்சியைச்
சேர்ந்த நகுலகுமார் அபிராமி, கலைச்செல்வன் யூலியட், சிவகுமார் திசான்
ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1