Pagetamil
இலங்கை

காட்டுக்குள் உல்லாசமாக இருக்க சென்றவர்கள் கைது

நல்லதண்ணி வனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து உல்லாசமாக இருந்த எட்டு பேரை வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் இன்று மதியம் கைது செய்துள்ளனர்.

இன்று மதியம் காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில்லை பகுதிக்கு செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 60 வயதிற்குள் உள்ள ஆறு ஆண்கள் மற்றும் 25 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள இரண்டு பெண்களாவார்.

வனத் துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில், நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சந்தேகத்தின் பேரில் எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் வனத்தின் பாதுகாப்பு சட்டங்களை மீறி, அனுமதியின்றி வனத்திற்குள் சென்றதாகவும், இதனால் வனப்பகுதியின் இயற்கை அமைதி மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்

east tamil

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment