25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
கிழக்கு

பத்தாவது வருடத்தில் Society of Tringographers

திருகோணமலையில் புகைப்படக் கலை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் Society of Tringographers, 2014 ஆம் ஆண்டில் “291 Gallery Academy” எனும் பெயரில் தொடங்கப்பட்டது. ரவிஸ் தவராஜா, அர்ஜுன் சண்முகலிங்கம், அரவிந்தன் செந்தூரன், சஞ்சய் ஆகிய நால்வரால் அத்திவாரமிடப்பட்ட இந்த கழகத்தில், பின்னர் நிக்கி தொம்சனும் இணைந்து ஐவர் கொண்ட குழுவாக மாற்றமடைந்தது.

புகைப்படத்துறையில் ஆர்வம் உள்ளவர்களை உள்வாங்கும் நோக்கில், கழகத்தின் முதலாவது கலந்துரையாடல் சந்திப்பு 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் சண்முகா ஆண்கள் இல்லத்தில் நடைபெற்றது. ஆரம்ப காலத்தில் நால்வர் குழுவாக இருந்த இதில், தற்போது 54 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். அதில் ஏழு பேர் முக்கிய பொறுப்புக்களில் பணியாற்றுகின்றனர்.

இக்கழகம் புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் அடிப்படை அறிவையும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தெளிவையும் புகுத்தி அவர்களின் திறமையை வெளிக்கொணர உதவியாக உள்ளது. இதன் மூலம் சமூகத்தில் புகைப்படக் கலைஞர்களின் அடையாளத்தை உருவாக்கும் நோக்குடன் செயல்படுகிறது.

இந்த அடிப்படையில், தேசிய ரீதியில் மூன்று கண்காட்சிகள், பாடசாலை மட்ட புகைப்படப் போட்டிகள், வில்பத்து, மின்னேரியா, கௌடுள்ள ஆகிய இடங்களில் அமர்வுகள், பயிற்சிகள் என்பவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று வரை, புகைப்படக் கலைஞர்களின் திறமையை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிக்கொணர, இந்த குழு முக்கிய பங்காற்றி வருவதோடு, புகைப்படத் துறையில் சிறந்த முன்னோடி அமைப்பாக இருப்பதற்கான பயணத்தில் தொடர்ந்து வளர்ச்சி காணும் அமைப்பாக செயற்பட்டு மையும் குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

east tamil

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

Pagetamil

Leave a Comment