பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக முன்னேற்றும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் (03) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
பொலன்னறுவைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவையில் தங்காமல் இருப்பது குறித்து அங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி சுற்றுலா கைத்தொழிலின் நன்மைகள் மக்களுக்கு கிடைத்தல் மற்றும் அதன் பயன்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படல் போன்ற வேலைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் பொலன்னறுவைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி. பி. சரத் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான மெய்தான்ஸ் மேஸின் நிர்வாக அதிகாரியும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.