இன்று (03.01.2025) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் திரு. ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களுக்கும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் திரு. Leavan S. Dzhagaryan அவர்களுக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இங்கு ஆளுநர் தான் ரஷ்ய பட்டதாரி என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி முயற்சிகளுக்காக முக்கியமான தருணமாக காணப்படும் இச்சந்திப்பு எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்துடன், இலங்கையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு அதிகப்பட்ச ஆதரவை வழங்குவதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.
மேலும், இச்சந்திப்பில் இலங்கைக்கான மனிதாபிமான உதவியின் கீழ் ரஷ்ய கூட்டமைப்பிடம் இருந்து பெறப்பட்ட உரத்திற்கு தான் நன்றி கடன்படுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறாக ரஷ்ய – இலங்கை உறவுகளை வலுப்படுத்தல், மனிதாபிமான உதவிகள், கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இலங்கை – ரஷ்ய தொடர்புகளை வலுவாக்கல் என பல முக்கிய அம்சங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.