குட்டி உயிரிழந்தால் தாயின் வேதனை என்ன என்பதைத் திமிங்கலம் ஒன்று வெளிப்படுத்துகிறது..
Pacific Northwest orca எனும் அருகிவரும் வகையைச் சேர்ந்த J35 திமிங்கலம் அண்மையில் குட்டியை இழந்தது.
அது நேற்று முன்தினத்திலிருந்து (1 ஜனவரி) குட்டியின் உடலைச் சுமந்தவாறு பெருங்கடலில் நீந்திச் செல்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த திமிங்கல ஆய்வு நிலையம் அதன் படங்களை பேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்தது.
J35 திமிங்கலம் இரண்டு வாரங்களுக்கு முன் குட்டியை ஈன்றெடுத்ததாக நம்பப்படுகிறது.
கடந்த வாரம் குட்டியின் உடல்நலம் குன்றி உயிரிழந்தது.
தாய் திமிங்கலம் இதுவரை 4 குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றில் இரண்டு மட்டுமே உயிருடன் உள்ளன.
2018இல் ஒரு குட்டியை இழந்தபோதும் J35 அதன் உடலை 17 நாட்கள், சுமார் 1600 கிலோமீற்றர்கள் சுமந்து சென்றது.
அதனுடன் கூட்டமாகச் செல்லும் சில திமிங்கலங்கள் குட்டியை மாற்றி மாற்றி ஏந்திச் சென்றன.
orca திமிங்கல வகையில் 5இல் ஒரு குட்டி மட்டுமே முதல் பிறந்தநாள் வரை வாழ்கிறது.