திருகோணமலையை அண்மித்த கடலில் கண்டெடுக்கப்பட்ட இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான ஆளில்லாத விமானம் இலங்கைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி அறிக்கை விமானப்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில், இந்த ஆளில்லாத விமானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட என்பதும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.
மீனவர் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக கடலில் இருந்ததாகவும், அதனை மீண்டும் தொடர்புடைய நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
1
+1
+1