கம்பளை அட்டாபாவில் உள்ள உடகம கிராமிய வைத்தியசாலைக்கு குளவி தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் அலறியடித்து ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண் குளவி தாக்குதலிலிருந்து தப்பிக்கொள்வதற்காக குறித்த வைத்தியசாலைக்கு அலறியடித்து
மருத்துவர்களின் அருகே ஓடியபோது, அங்கிருந்த 11 பேருக்கு குளவிகள் தாக்கி, அவர்கள் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை ஊழியர்கள் நால்வர், மருத்துவமனைக்கு வந்திருந்த எட்டு பெண்கள், மருத்துவமனையை நடத்திய மருத்துவர் உள்ளிட்ட 11 பேர் குளவிகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்டபாவின் கலவெல்கொல்ல பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை பருந்து தாக்கியதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
அவ்விடத்திலிருந்து பயணித்த பெண் ஒருவரை குளவி கொட்டியதால், அதிலிருந்து தப்பிக்க அவர் அலறியடித்து வைத்தியசாலைக்கு ஓடியுள்ளார்.