உயர்தரத்தில் கல்வி பயிலும் பிள்ளைகள் பாடசாலையில் இருந்து விலகுவது தொடர்பாக கட்டாயம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும், எந்த ஒரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மகரகம தேசிய கல்வி நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஷயத்தை மேற்கொண்ட பிரதமர் இதனை தொடர்பாக தெரிவித்துள்ளார்.
தற்காலத்தில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் பிள்ளைகள் தொடர்ச்சியாக இருப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விசேடமாக ஆண் பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்வது உயர் மட்டத்தில் உள்ளது.
எந்த ஒரு சமூகப் பொருளாதார காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்பட இடமளிக்கக் கூடாது. குழந்தைப் பருவ வளர்ச்சியிலிருந்து 13 வருட கால பாடசாலை கல்வி உட்பட உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் அனைத்து பிள்ளைகளுக்கும் பகிரங்கமாக காணப்பட வேண்டும். தனிநபர் மற்றும் சமூக பரிணாமத்தை ஏற்படுத்துவதே இந்தக் கல்வியின் பிரதான இலக்கென அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
மேலும், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன, பிரதிப் பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வின் போது, மக்கள் கோரிய சமூக பரிணாமத்தை முன்னெடுப்பதற்கு என பரிணாமம் அடைந்த கல்வி மாற்றத்தை மேற்கொள்வதன் ஊடாக இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு புதிய உலகில் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நமது அரசு செயற்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
சமூகத்திற்கு பொறுப்பு கூறும் பிரஜையை உருவாக்குவதற்கென கல்விக்காக ஒதுக்கப்படும் ஒவ்வொரு மூலதனத்தையும் நாட்டின் எதிர்காலம் முதலீடாகவே நாம் பார்க்கின்றோம். நீண்ட கால பிரதிபலன்களை கொண்டுள்ள இந்த உணர்வுபூர்வமான வேலை திட்டங்கள், குறித்து தேசிய கல்வி நிறுவனத்திற்கு விசேட பொறுப்புகள் காணப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.