நேற்றைய தினம் (28.12.2024) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கே. பிரபு, திலீப், குழுவின் பிற உறுப்பினர்கள் இணைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ் விஜயத்தின் போது, வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நிகழ்த்தப்பட்டிருந்தது. இதில், சுகாதார சேவைகளில் நிலவும் குறைகள், தேவையான வளங்கள், மருத்துவமனையின் தற்போதைய சேவை நிலை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்படுத்தல்கள் என்பன தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நவீன வசதிகள், புதிய திட்டங்கள் மற்றும் நிர்வாகத்தால் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.