27.5 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

யாழ் வீதியில் சாகசம் காட்டிய தனியார் சிற்றூர்தியின் வழித்தட அனுமதி இரத்து!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று (28), போக்குவரத்து நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் சிற்றூர்தியின் உரிமையாளரின் வழித்தட அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

தனியார் சிற்றூர்தி மேற்படி வழித்தடத்தில் போக்குவரத்து நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நேற்று அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கு அமைவாக முதல் கட்டமாக 29 சிறி 7911 என்ற தனியார் சிற்றூர்தியின் உரிமையாளரின் வழித்தட அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் சாரதி, நடத்துனர் மற்றும் சிற்றூர்தியின் உரிமையாளர் மேலதிக நடவடிக்கைக்காக உரிய ஆவணங்களுடன் அதிகார சபைக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதனா வைத்தியசாலையில் வைத்தியரைப்போல நுழைய முற்பட்ட நபர் கைது

east tamil

இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்திற்குள் வீசிய இராணுவ வீரர்கள் கைது

east tamil

சபாநாயகரின் இல்லம் தொடர்பில் புதிய சர்ச்சை

east tamil

தெற்கு களுத்துறை ரயில் சேவைகளில் தடை

east tamil

கப்பம் கோரிய முன்னால் அமைச்சர்கள்

east tamil

Leave a Comment