கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த 251 பேருடன் சேர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக 8,747 பேர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் போக்குவரத்து விதி மீறல்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதுபோன்ற விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்