மாவீரர் துயிலுள்ளங்களுக்கு அரசியல் தலையீடுகளுக்கு இடம் அளிக்கப் போவதில்லை என மாவீரர் போராளி குடும்ப பலன் காப்பகத்தின் ஏற்பாட்டுக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மூன்று மாவீரர்களின் தாயை மாவீரன் நாள் அன்று பொதுச்சுடர் ஏற்றுவதற்கு அழைத்துவரப்பட்ட பின்னர் அவமதித்து வெளியே அனுப்பிய சம்பவம் தொடர்பாக
நேற்று (21) மாவீரர் போராளி குடும்ப பலன் காப்பகத்தின் ஏற்பாட்டில்
வடக்கு கிழக்கு இணைந்த முன்னாள் போராளிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் சமூக
ஆர்வலர்கள் என்ன பலர் கலந்து கொண்டு, இனி வரும் காலங்களில் மாவீரர்களின்
பெற்றோர்கள் கௌரவித்தல் மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் இல்லாமல்
மாவீரர் நினைவேந்தல் செய்வது மற்றும் மூன்று மாவீரர்களின் தாயை அவமதிப்பு
செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இக் கலந்துரையாடல் கூட்டுறவாளர்
மண்டபத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து இதன் பின்னர் ஊடக சந்திப்பு ஒன்றை மாவீரர்கள் போராளிகள்
குடும்பநலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் அவர்கள் நாடத்தி
இருந்தார். எதிர்வரும் காலத்தில் மாவீரர் நினைவேந்தர்களை தாம் பொறுப்பு
எடுத்து செய்வதாகவும் அதற்கேற்றவாறு தாம் நிர்வாகங்களை தேர்வு செய்து
அனைவரும் காலங்களில் அரசியல் தலைவர்கள் அற்று முன்னாள் போராளிகள் தலைமை
தாங்கி மாவீரர் நினைவேந்தலை நடத்துவதாகவும் அதுக்கு முன்னாயத்தமாக
கூட்டமாக இது நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகள் யாரும் இந்த
நிர்வாகத்தை எதிர்த்து செயல்பட்டு வருபவர்களாகயிருந்தால் அவற்றுக்கு
முகம் கொடுத்து எமது பணிகளை திறம்பட செய்வோம் என திட்டவட்டமாக
கூறியிருந்தார்.