25 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவரும், போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
36 வயதுடைய பெண் ஒருவரும் 44 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 25 இலட்சம் பெறுமதியான 94 கிராம் ஹெரோயின் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டுபாயில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான அல்டோ தர்மாவின் போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1