நேற்றைய தினம் (18.12.2024) திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மத பேதமின்றி மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தவர்களும், கிறிஸ்மஸ் பண்டிகை உள்ளிட்ட பல்வேறு விஷேட நிகழ்வில் போது, வேறுபாடுகள் ஏதுமின்றி ஒற்றுமையுடனும் சிறப்பாகவும் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு, இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கிய சிறுவர் சிறுமிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளினால் நத்தார் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர்.