26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

ஞானசார தேரருக்கு பிடியாணை

கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட ஞானசார தேரருக்கான வழக்கின் தீர்ப்பு இன்று (19.12.2024) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சுகயீனம் காரணமாக ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, தீர்ப்பின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததோடு, ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

மின் கட்டணங்கள் இடைநிறுத்தம்

east tamil

முட்டையின் விலையில் வீழ்ச்சி

east tamil

Leave a Comment