27.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
குற்றம்

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

ஹோமாகம, பனாகொட, பெலேதகொட, ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்த்தகர் என தெரிவிக்கப்படும் ஒருவரின் வீட்டின் மீது இன்று (18) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்களை பயன்படுத்தும் திறன் கொண்ட பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், இரண்டு வெற்று கோதுகள் மற்றும் ஒரு பயன்படுத்தாத தோட்டாவும் வீட்டின் முன் வீதியில் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வர்த்தகரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த வீட்டின் உரிமையாளர் மேலும் பல போதைப்பொருள் வர்த்தகர்களிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாக சந்தேகிப்பதாக மீகொட பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொட பொலிஸ் பிரிவின் குற்றப் பிரிவினர் ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

UPDATE: கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிததற்கு காரணம் இதுவா?: மனைவியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

Pagetamil

கணவன் முறைப்பாடு: சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மனைவி கைது!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

கனடா போயும் திருந்தாத யாழ்ப்பாண கணக்காளர்: ஓசிக் குடிக்கு ஆசைப்பட்டு விமானத்தில் சிக்கிய பரிதாபம்!

Pagetamil

யாழில் பூசகரை கட்டி வைத்து கொள்ளை: பெண் உள்ளிட்ட 2 பேர் கைது!

Pagetamil

Leave a Comment