25.7 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

காதலன் மீது சந்தேகம்: புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்த இலங்கை ரிக்ரொக் பிரபலம்!

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவில் 20 வயதான யுவதியொருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று (17) இந்த சம்பவம் நடந்தது.

முந்தல், நவன்டான்குளம் பகுதியில் வசிக்கும்  ஆர்.ஏ.பியுமி மல்ஷானி என்ற, ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் யுவதியே உயிரை மாய்த்துள்ளார். அவரது காதலனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புள்ளது என்ற சந்தேகத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

மாரவில ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் யுவதி, அதே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
குறித்த இளைஞன் யுவதியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மை நாட்களாக, தொலைபேசி அழைப்புகளில் இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாக அவரது தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்று காலையிலும், தொலைபேசி வாக்குவாதத்தை தொடர்ந்து புகையிரத பாதைக்கு அருகில் உள்ள தனது வீட்டிலிருந்து, புகையிர பாதை நோக்கி யுவதி சென்றபோது, தாயார் இது பற்றி கேட்டுள்ளார்.

முகம் கழுவிக்கொண்டு வருகிறேன் என்று மகள் கூறியதும், தாயார் சந்தேகமடையவில்ல.

எனினும், மகள் வீட்டிற்கு வர தாமதமானதால் மீண்டும் வெளியில் வந்து பார்த்த போது, வீட்டில் மகளை காணவில்லை. புகையிரத பாதையை பார்த்துள்ளார். அங்கே, தூரத்தில் புகையிரதம் வந்து கொண்டிருந்த நிலையில், மகள் புகையிரதத்தை நோக்கி ஓடிச்செல்வதை பார்த்துள்ளார். யுவதி ஓடிச்சென்று, தண்டவாளத்தில் படுத்துள்ளார்.

புகையிரதம் வருவதால், தண்டவாளத்திலிருந்து எழுந்து வருமாறு தாய் சத்தமிட்டபடி ஓடிச்சென்றார்.

எனினும், தாயார் ஓடிச்செல்வதற்கு முன்னதாக, புகையிரதம் யுவதியை மோதியது.

புகையிரதம் மோதி யுவதியின் உடல் துண்டுதுண்டாக, தாயின் கண்முன்பாக வீசப்பட்டுள்ளது.

புகையிரத சாரதி, புகையிரதத்தை நிறுத்தி சடலத்தை மதுரங்குளி புகையிரத நிலையத்திற்கு கொண்டு வந்து பின்னர் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த யுவதி ரிக்ரொக்கில் பிரபலமானவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

கொழும்பிலிருந்து வந்த அதிசொகுசு பேருந்து: யாழில் அதிகாலையில் கோர விபத்து!

Pagetamil

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

east tamil

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

Leave a Comment