27 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

நாடாளுமன்றத்துக்குள்ளும் நாகரிகமில்லாமல் பேச்சு… அர்ச்சுனாவின் வேட்டியை உரிந்த ஜேவிபி!

நாடாளுமன்றத்துக்குள் முறையற்ற விதமாக பேசிய யாழ்ப்பாணம் ஊசி எம்.பி, இராமநாதன் அர்ச்சுனாவின் உரை கன்சார்ட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

நடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ள வேண்டிய நகாரிகம், முதிர்ச்சி எதுவுமற்று- தற்குறி போல அர்ச்சுனா நடந்து கொள்வதால்- யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்குள் எழுப்ப முடியாத இக்கட்டான நிலையும் எழுந்துள்ளது.

அர்ச்சுனாவின் தற்குறித்தனமான நடத்தை- பேச்சினால்- அவரது உரையை யாரும் கணக்கெடுக்காத நிலைமையேற்பட்டுள்ள சூழலில்- நாடாளுமன்றத்திலும் அவரது நடத்தை காரணமாக “ஒரு மாதிரி“ பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்களின் பிரச்சினையை எழுப்புகிறேன் என்ற பெயரில்- வைத்தியர் த.சத்தியமூர்த்தி மீதான தனிப்பட்ட குரோதத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து, அவரது பேச்சு இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க எழுந்து, நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டிய, எழுப்பப்படும் கேள்விகள் பற்றி அர்ச்சுனாவுக்கு புரியும்படி வாசித்தார். எனினும், அதையும் கேட்காமல், அர்ச்சுனா கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீதும், ஓ.எல் சித்தியடையாதவர் என பொய்யான விடயத்தை கூச்சலிட்டார்.

இதன்போது- பிமல் ரத்னாயக்க தலையிட்டு- கிண்ணியாவில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்ட மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்டதற்கு கணக்கு தீர்க்கிறீர்களா என கேட்டார்.

இதனால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.

தனது குட்டு உடைந்ததால் அர்ச்சுனா சங்கடத்தில் நெளிந்தபடி உட்கார்ந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன?: டக்ளஸ் கேள்வி!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிவின் நன்கொடை

east tamil

எலிக்காய்ச்சலால் வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்படலாம்!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!

east tamil

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க புதிய தலைவர், செயலாளர் தெரிவு!

east tamil

Leave a Comment