நேற்று (17.12.2024 – செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, “இலங்கை நாடாளுமன்றம் தற்போது நகைச்சுவையாளர்களால் நிரம்பியிருக்கிறது” என விமர்சித்தார்.
தொடர்ந்து, “அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி நியமித்த சபாநாயகரின் கல்வித் தகைமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது எனவும், அவர் பதவி விலகியதையடுத்து, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனவும்,
புதிய சபாநாயகரின் பெயரின் முன்னால் ‘கலாநிதி’ என்ற பட்டம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்றத்தில் உள்ள 20 – 30 பேரின் கல்வித் தகைமைகள் பரிசோதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதுவே இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் விசாரணையாகும் என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1