அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Date:

அனுஷ்கா நடித்துள்ள ‘Ghaati’ தெலுங்கு திரைப்படம் வரும் ஏப்ரல் 18ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.

அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘Ghaati’ என பெயரிடப்பட்டுள்ளது. இவர் தமிழில் வெளியான ‘வானம்’ படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனான ‘வேதம்’ படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக அனுஷ்காவுடன் கிரிஷ் கைகோத்துள்ளார். யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைக்கிறார். அண்மையில் வெளியான இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ, அனுஷ்காவின் ஆக்‌ஷன் சம்பவமாக இந்தப் படம் இருக்கும் என்பதை உணர்த்தியது. இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்ரல் 18ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்