28.9 C
Jaffna
April 4, 2025
Pagetamil
விளையாட்டு

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

ஹமில்டன் டெஸ்ட் போட்டியில் 658 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இங்கிலாந்து 234 ரன்களுக்குச் சுருண்டு தோற்றது. நியூஸிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை 2-1 என்று இங்கிலாந்து வென்றாலும் நியூசிலாந்து தொடரை வெற்றியுடன் முடித்தது. இது நியூஸிலாந்தின் மிகப்பெரிய வரலாற்று வெற்றியாகும்.

இந்த டெஸ்ட் போட்டியுடன் டிம் சவுதி ஓய்வு பெற்றார். 107 டெஸ்ட் போட்டிகளில் சவுதி 391 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிட்டத்தட்ட 16-17 ஆண்டுகாலம் நியூஸிலாந்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். துடுப்பாட்டத்தில் 107 போட்டிகளில் 2245 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 77 மற்றும் 98 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.

இங்கிலாந்து அணியில் இன்று பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக துடுப்பாட்டம் செய்யவில்லை. எங்கிருந்தோ அழைத்து வரப்பட்ட மிட்செல் சாண்ட்னர், முதல் இன்னிங்சில் 117 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். இரண்டாவது இன்னிங்சில் கேன் வில்லியம்சனின் அட்டகாசமான 160 ரன்களுடனும், சாண்ட்னர் 38 பந்துகளில் 49 ரன்களை 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் விளாசி 49 ரன்களை எடுத்ததோடு இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். தொடர் நாயகனாக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி டெஸ்ட்டில் சவுதி 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பெத்தல் விக்கெட்டுடன் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று முடிந்தார். ஹமில்டன் செடான் பார்க் டிம் சௌவுதியின் ஹோம் கிரவுண்ட். அவர்தான் வெற்றி அணியாக நியூஸிலாந்தை வழிநடத்தி அழைத்துச் சென்றார்.

ஹமில்டனில் கடைசி 10 டெஸ்ட்களில் நியூஸிலாந்து 8 டெஸ்ட் போட்டிகளில் வென்று இந்த மைதானத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இங்கிலாந்து இன்று 18/2 என்று தொடங்கியது. 658 ரன்கள் இலக்கு எட்டாக்கனி. சமனிலை செய்வதும் சாத்தியமல்ல. ஜோ ரூட்டும் பெத்தலும் 9 ஓவர்களில் 50 ரன்களைச் சேர்த்தனர். நியூசிலாந்தின் பிடிகளை தவறிவிடும் பழக்கம் இன்றும் தொடர்ந்தது. ரூட்டிற்கு ரொம் லதம் மோசமாக பிடியை தவறவிட்டார்.

மேலும் வில் ரூர்க் மிக ஆக்ரோஷமாக வீசினார். மணிக்கு 154 கிமீ வேகம் வீசி பெத்தலைப் பிடித்து ஆட்டிப் படைத்தார். இருவரும் 104 ரன்களைச் சேர்த்த போது ஜோ ரூட் 54 ரன்களில் சாண்ட்னரிடம் எல்.பி. ஆனார். ஹாரி புரூக், ரூர்க்கின் அதிவேக எகிறு பந்தில் ஸ்லிப்பில் பிடி கொடுத்தார். ஜேக்கப் பெத்தல் 76 ரன்களில் சவுதியிடம் வீழ்ந்தார்.

ஆலி போப் 17 ரன்களில் ஹென்றி பந்தில் போல்ட் ஆக, கஸ் அட்கின்சன் 41 பந்துகளில் 43 ரன்கள் என்று வேகம் காட்டினார். அட்கின்சன், கார்ஸ், பாட்ஸ் ஆகியோரை சாண்ட்னர் வீழ்த்த, பென் ஸ்டோக்ஸ் இறங்க முடியாததால் இங்கிலாந்து 234 ரன்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்து தோல்வி கண்டது. டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் தோற்பது இங்கிலாந்தின் வழக்கமாகி வருகிறது.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!