இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (16.12.2024 – திங்கட்கிழமை) புதுடில்லியில் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருந்து, இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்தும் வரவேற்கத்தக்க விடயம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, திருகோணமலையை பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்து பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு பாராட்டுத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.